அடுத்த 24 மணி நேரத்தில் புயல்... சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து

Last Modified சனி, 10 நவம்பர் 2018 (16:27 IST)
தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அந்தமான் பகுதியில் நிலவிவருகிறது. 
 
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்ற புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் மாறவுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
இதன் காரணமாக அந்தமான் நிகோபர் தீவுகளில் மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், அந்தமான் கடல் மற்றும் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. 
 
இதனிடையே சர்வதேச வானிலை அமைப்புகள் அந்தமான் கடலில் உருவாகும் புயல் சென்னையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 
அதன்படி, வரும் 14 ஆம் தேதி சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும் புயல் 15 ஆம் தேதி காலை சென்னையை நெருங்கும். அன்றைய தினம் மாலை புதுவை நோக்கி நகர்ந்து 16 ஆம் தேதி காலையில் புதுவை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே 13 ஆம் தேதி முதல் சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், காற்றின் திசை மாறினால் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :