திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (22:36 IST)

யாரும் ஏமாற வேண்டாம்.. பிரபல இயக்குநர் ரசிகர்களுக்கு அறிவுரை

தமிழ் சினிமாவில் உள்ள இளம் இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் நரேன்.  இவர் துருவங்கள் பதினாறு என்ற படத்தில் இயக்குநராக  அறிமுகமானார்.

இவர், அடுத்த படத்தை நரகா சூரன் என்ற  பெயரில் ஆரம்பித்தார். இதன் இணைத்தயாரிப்பாளராக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து பின் விலகினார். இப்படம் எப்போது ரிலீஸுக்கான பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

 இதையெடுத்து அருண்விஜயை வைத்து, மாஃபியா என்ற படத்தை இயக்கினார். தற்போது தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், எனது புதிய படத்தில் நடிக்க வைப்பதாக ஒரு பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். எனவே 9777017348 என்ர எண்ணில் இருந்து இதுபோல் தகவல் வந்தால் அதை பிளாக் செய்து விடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.