தமிழகத்தில் கொரோனாவிற்கு 3வது பலி!

coronovirus
Sinoj| Last Updated: சனி, 4 ஏப்ரல் 2020 (18:01 IST)

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் , 12பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, தமிழகம் 412
கொரோனா பாதிப்புகளுடன் கொரோனா பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த போடியைச் சேர்ந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

போடியைச் சேர்ந்த பெண்ணுக்கு அவரின் கணவர் மூலமாக கொரோனா தொற்று பரவியுள்ளது.

மதுரை, விழுப்புரத்தை சேர்ந்த இருவரை தொடர்ந்து தற்போது தேனியிலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :