விஜய் படத்தில் எனக்குப் பிடித்த சீன் இதுதான்….தயாரிப்பாளர் டுவீட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் அட்லியின் இயக்கத்தில் மூன்றாவதாக இணைந்த படம் பிகில்.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இப்படம் வசூல் சாதனை படைத்தது. ஆனால் சில விமர்சனங்களையும் சந்தித்தது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒருவருடம் ஆகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்க்கியுள்ளனர். மாஸ்டர் படம் வெளியவதில் தாமதமாகுவதால், மீண்டும் தீபாவளிக்கு பிகில் வெளியாவதாகத் தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில், பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பிகில் படத்தில் விஜய்யின் ரவுடி கோச் கதாப்பாத்திரத்தில் வரும் குறிப்பிட்ட சின் தனது பேவரேட் சீன் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.