1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (14:10 IST)

தேசிய விருது இல்லை : வருத்தத்தில் ஜோதிகா?

தேசிய விருது கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறார் ஜோதிகா என்கிறார்கள்.
 
65வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ்ப் படமாக ‘டூ லெட்’ தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் 32 படங்கள் போட்டியிட்ட நிலையில், செழியன் இயக்கிய ‘டூ லெட்’ படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
போட்டியிட்ட 32 படங்களில், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘நாச்சியார்’ படங்களும் அடக்கம். திருமணத்துக்குப் பின் ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரியான ஜோதிகா, கடந்த வருடம் இந்த இரண்டு படங்களிலும் நடித்தார்.
 
திருமணத்துக்குப் பின் ஜோதிகா நடித்து வெளியான மூன்று படங்களுமே 50 நாட்கள் ஓடியுள்ளன. எனவே, ஒரு விருதாவது நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்த்தாராம் ஜோதிகா. எனவேதான் இரண்டு படங்களையும் போட்டிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஒரு விருது கூட கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறாராம் ஜோதிகா.