வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (18:44 IST)

ஜனாதிபதி இல்லாத விருது விழா : கலைஞர்களை அவமதிக்கும் மத்திய அரசு

தேசிய விருது விழாவில் திரைப்பட கலைஞர்களை மத்திய அரசு அவமதித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில் 65வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் டூ லெட், பாகுபலி, மலையாள நடிகை பார்வதி, மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டது.  
 
டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில், பொதுவாக தேசிய விருதை ஜனாதிபதிதான் கொடுப்பார். ஆனால், இந்த முறை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 11 பேருக்கு மட்டுமே கொடுப்பார். மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிருது இராணி அளிப்பார் என அறிவிக்கப்பட்டது. 
 
இதனால், கோபமடைந்த இயக்குனர் செழியன், நடிகை பார்வதி, பாகுபலி பட தயாரிப்பாளர் பிரசாத் உள்ளிட்ட 69 பேர் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் விருதை கொடுக்க முடியாது எனில் அது தங்களுக்கு வேண்டாம் எனக் கூறிய அவர்கள், விழாவை புறக்கணிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பிவிட்டனர். இந்த விவகாரம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ஆனாலும், கலைஞர்களின் கோபத்தை நிராகரித்த மத்திய அரசு, எதிர்ப்பு தெரிவித்த 69 கலைஞர்களின் இருக்கைகளை நீக்கிவிட்டு விழாவை நடத்தினர். மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் விருதுகளை கொடுத்தனர்.
 
இதற்கு இயக்குனர் பாரதிராஜா உட்பட பல திரைப்பட கலைஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கலைஞர்களின் கோபம் நியாமானதுதான். தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு தலைவர் கொடுப்பதுதான் நடைமுறை. ஆனால், நம் நாட்டின் பாரம்பரிய வழக்கங்களை மத்திய அரசு ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி வருகிறது என அந்த விழாவை புறக்கணித்த கலைஞர்கள் புகார் கூறியுள்ளனர்.