1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (11:01 IST)

சந்திரபாபு வாழ்க்கையைப் படமா எடுப்பீங்களா? இயக்குனர் மிஷ்கினின் பதில்!

மறைந்த ஜாம்பவான் நகைச்சுவை நடிகரான சந்திரபாபு நினைவு நாளை முன்னிட்டு அவரது கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

தமிழ் சினிமாவில் தோன்றிய பன்முகத் திறமை கொண்ட கலைஞர்களில் சந்திரபாபு முக்கியமானவர், நடிப்பு, பாடல், நடனம் மற்றும் இயக்கம் என பலத்துறைகளில் சாதித்த அவர் ஒரு கட்டத்தில் பயங்கர வறுமைக்கு ஆளாகி பல கஷ்டங்களை அனுபவித்தார். எம் ஜி ஆரால் வாழ்ந்த பல தயாரிப்பாளர்கள் உண்டு என சொல்வது போல எம் ஜி ஆரால் வீழ்ந்த ஒரு தயாரிப்பாளராக சந்திரபாபுவை சொல்லலாம்.

இந்நிலையில் சந்திரபாபுவின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இயக்குனர் மிஷ்கின் அவர் கல்லறைக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். இது சம்மந்தமாக ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் சந்திரபாபுவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ’நல்ல ஐடியா. ஆனால் அதை படமா எடுக்க மாட்டேன். அவரோட வாழ்க்கையை சினிமாவா பார்க்குற எண்ணம் இல்லை. அவர் மிகப்பெரிய ஆளுமையா வாழ்ந்துட்டே இருப்பார்’ எனக் கூறியுள்ளார்.