திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (11:51 IST)

லிப் கிஸ் காட்சிக்கான காரணத்தைச் சொன்ன இயக்குநர்!

படத்தில் லிப் கிஸ் காட்சி இடம்பெற்றதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் இயக்குநர்.


 

 
பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அபியும் அவனும்’. மலையாள நடிகர் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் இருவரும் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில், ஹீரோ – ஹீரோயின் இருவரும் லிப் லாக் செய்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தப் புகைப்படம் வெளியாகி, பயங்கர வைரலாகியுள்ளது.

படத்தின் விளம்பரத்திற்காகத்தான் இந்தக் காட்சி எடுக்கப்பட்டது என விமர்சனம் எழுந்துள்ளது. ‘நிச்சயமாக இல்லை’ என மறுத்துள்ளார் இயக்குநர். “கதைக்கு அந்தக் காட்சி கண்டிப்பாகத் தேவைப்பட்டது. விளம்பரத்திற்காக அந்தக் காட்சியை எடுக்கவில்லை. அந்தக் காட்சியில் நடித்தபோது, நடிகர்கள் இருவருமே சாதாரணமாகத்தான் நடித்தனர்” என்கிறார் விஜயலட்சுமி.