திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (17:11 IST)

சூரரைப் போற்று படத்தைப் புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்

சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்த படம் சூரரைப் போற்று.  இப்படத்தைப சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு புகழ்ந்துள்ளார்.
 
இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளது.

சினிமாத் துறையினர் பலரும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின்

நெருங்கிய நண்பரும், சின்னத்திரைத் தொலைக்காட்சியின் நடிகருமான சஞ்சய் தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரைப் போற்று படத்தில் நான் முழுவதுமாக விரும்புகிறேன். சூரியாவிடமிருந்து அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்டுள்ளது. சுதா கொங்கரா சிறப்பாக இயக்கியுள்ளார். முழு டீமும்

நன்றாக பணியாற்றியுள்ளதாகப் பாராட்டியுள்ளார். இதற்கு பதிளித்த சூர்யா நன்றி மாமா என்று பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் சுதா கொங்கராவைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரைப் போற்று என்ன ஒரு புத்திசாலித் தனமான இயக்கத்தில் அற்புதமான நடிப்பாற்றல் உள்ளது. சூர்யா டாப் ஃபார்மில் உள்ளார். வாழ்த்துகள் சகோதர். ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு சுதா கொங்கரா, சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.