வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (18:37 IST)

சூப்பர் ஸ்டாருக்கு திரைக்கதை எழுதிய அட்லி !

இந்திய சினிமாவில் பிரசித்தி பெற்ற இயக்குநர் அட்லி. இவர் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல்,பிகில் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் அட்லியின் படங்கள் விமர்சங்களும் பாராட்டுகளும் இருந்தலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றுவிடுவதாகவும் ரசிகர்கள் பாராட்டுவது வாடிக்கை.

இந்நிலையில், சமீபத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லி ஒரு பட இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று இந்திய அளவிலான மீடியாக்களில் பாலிவுட் கிங் கான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அடுத்த படம் பிரமாண்ட தயாரிக்கப்பட உள்ளதாகவும் இதற்காக அட்லியின் திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருகிறதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜய்யை வைத்து தொடர்ச்சியாக 3 படங்கள் எடுத்த அட்லி, பாலிவுட்டில் நுழைந்து சூப்பர்ஸ்டார் ஷாருகானை வைத்து இயக்கவுள்ள படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.