இயக்குனரை துபாய்க்கு இழுத்தடிக்கும் யுவன் ஷங்கர் ராஜா!
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தின் டைட்டில் ஏழுகடல் ஏழுமலை என்று அறிவிக்கப்பட்டு கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு வருகிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக இயக்குனர் ராமை யுவன் ஷங்கர் ராஜா துபாய்க்கு வர சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு விரைவில் படத்துக்கான இசைகோர்ப்புப் பணிகள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.