1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (20:56 IST)

மீண்டும் இரட்டை இலக்கில் சென்ற கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் எவ்வளவு?

corona
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு இருந்துவரும் நிலையில் இன்று இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 57 என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
இன்று கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 12 என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அவர்களில்   2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், 3 பேர் கோவையை சேர்ந்தவர்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
 
இன்று குமரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை என  சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
Edited by Siva