வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (17:28 IST)

குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குநர் பா. ரஞ்சித் எதிர்ப்பு!!

சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சென்னையைச் சுத்தப்படுத்தும் திட்டத்தைத்தான் ஆளும் கட்சியினர் செய்து வருகின்றனர். சென்ன்னைத் தீவுத்திடலின் அருகே உள்ள காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற அரசு முடிவு செய்தால்… அம்மக்களுக்கு அப்பகுதியிலிருந்து 8 கிமீ தொலைவுக்குள் மாற்று இடம் தர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சர்பேட்டா பரம்பரை விரைவில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.