1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (08:37 IST)

“இன்றைய சமுதாயத்தில் நடப்பதைக் காட்டினால் சாதி வெறியன்..” – இயக்குனர் மோகன் ஜி ட்வீட்!

சென்னையில் மகளிர் ஆணையத்தின் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய தலைவர் ஏ எஸ் குமரி ”பெண்கள் தங்கள் புகைப்படங்களை DPல் வைக்கக் கூடாது. அதை வைத்து மார்பிங் செய்து விடுகிறார்கள்.” என பேசியிருந்தார்.

அந்த பேச்சை மேற்கோள் காட்டிய திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டுள்ள ட்வீட் கவனம் பெற்றுள்ளது. அவரது ட்வீட்டில் “இந்த அறிவுரை சாதி வெறியாகவும், பிற்போக்குத்தனமாகவும் பார்க்கப்படும். இன்றைய சமுதாயத்தில் நடக்கும் எந்த தவறையும் திரைப்படத்தில் காட்டக் கூடாது. மீறினால் சாதி வெறியன், பிற்போக்குவாதி பட்டம் தரப்படும். பழைய கதைகளை திரையில் பேசினால் முற்போக்கு, புரட்சி...” என கூறியுள்ளார்.