1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (16:22 IST)

விஷாலுக்கு எதிராக பிரபல இயக்குனர் கருத்து – மிஷ்கினுக்குப் பெருகும் ஆதரவு !

விஷால்

விஷால் – மிஷ்கின் இடையிலான பிரச்சனை பெரிதாகிக் கொண்டே செல்லும் நேரத்தில் இயக்குனர் மீரா கதிரவன் விஷாலுக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பதும், இதனை அடுத்து விஷாலே இந்த படத்தை தொடர்ந்து இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால் மற்றும் மிஷ்கின் ஆகிய இருவரும் மாறி மாறி அறிக்கைகள் விட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். மேலும் நேற்று சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குநர் மிஷ்கின் ‘விஷால் தன் தாயைத் தவறாகப் பேசியதாகவும், தனது தம்பியை தாக்கினார் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து விஷாலுக்கு எதிராக மிஷ்கினுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது.

இயக்குனர் மீராகதிரவன் தன் சமூகவலைதளப் பக்கத்தில் ‘விஷால் ஒரு மகா நடிகன். கேமிராவுக்கு முன்னால் அல்ல..பின்னால்.. அனுபவத்தில் சொல்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். முன்னர் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது ஆதரவை மிஷ்கினுக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.