புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (18:50 IST)

இயக்குனர் மகேந்திரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' உள்ளிட்ட அற்புதமான படங்களை இயக்கியவர். இவர்  தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவின் வரலாற்றின் மிகச் சிறந்த இயக்குனராக கருதப்படும் இவர் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், வசன கர்த்தா, நடிகர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். எம்.ஜி.ஆர். உதவியோடு தமிழ் திரை உலகில் நுழைந்த இவர்,  இயக்குனராக பல அற்புத படங்களை இயக்கி தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 
 
எம்..ஜி.ஆர் காலகட்டத்தில் துவங்கிய இவரது திரைப்பயணம், விஜய்யின் தெறி, ரஜினியின் பேட்ட, அதர்வாவின் பூமராங், விஜய்சேதுபதியின் சீதக்காதி, கெளதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களிலும் நடித்துள்ளார். 

இந்த நிலையில் சற்றுமுன் இவரது மகன் ஜான் மகேந்திரன் டுவிட்டரில் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மகேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.