1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (07:40 IST)

LCU வில் 10 படங்கள் பண்ணுவேன்… லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் நான்கே படங்களில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வரும் நிலையில் முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் தனக்கென ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸை கைதி மற்றும் விக்ரம் படங்களின் மூலம் உருவாக்கி உள்ளார் லோகேஷ். இது LCU என ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் இயக்கும் லியோ திரைப்படம் LCU கீழ் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி சமீபத்தில் பேசியுள்ள லோகேஷ் “LCU வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதில் இருந்து வெளியேறி விடுவேன். இந்த LCU முயற்சிக்கு நான் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்குதான் நன்றி கடன் பட்டுள்ளேன். இது சாதாரண விஷயம் கிடையாது. தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். லியோ படம் LCU வில் வருமா இல்லையா என்பதற்கு இன்னும் 3 மாதம் காத்திருங்கள்” எனக் கூறியுள்ளார்.