1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (20:35 IST)

‘சூர்யா 42’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

surya 42
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கேஎஸ் ரவிக்குமார் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நாயகியின் தந்தையாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் 10 மொழிகளில் 3d டெக்னாலஜி உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva