செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:41 IST)

’சூர்யா 42’ தயாரிப்பாளர் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பு!

Gnanavel
சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஞானவேல் ராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
இந்த படம் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ரத்தம் மற்றும் வியர்வை சிந்தி எடுக்கப்படுகிறது என்றும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக ரசிகர்களுக்கு தர வேண்டும் என்று திட்டமிட்டுருக்கும் நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லீக் செய்வது அதன் நோக்கத்தை குலைத்துளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தொடர்ந்து இதுபோல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லீக் செயப்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது