ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (07:57 IST)

அடுத்தடுத்து மூன்று ஹீரோக்களுக்கு கதை சொன்ன இயக்குனர் ஹரி!

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட ’அருவா’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது. இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும் ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இது சமம்ந்தமாக இயக்குனர் ஹரி சூர்யா மேல் கோபத்தில் சில அறிக்கைகளையும் வெளியிட்டார். இந்நிலையில் இப்போது இயக்குனர் ஹரி புதிதாக திறந்துள்ள குட்லக் டப்பிங் ஸ்டுடியோவின் திறப்பு விழாவுக்கு சூர்யா வருகை தந்தது திரையுலகில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யா மட்டும் இல்லாமல், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் கதை சொல்லி ஓகே வாங்கி வைத்துள்ளாராம் ஹரி. இதில் முதலில் விஷால் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. அந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க உள்ளாராம்.