திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (09:14 IST)

சூர்யா 42 படத்தின் டைட்டில் “கங்குவா”! – டைட்டில் டீசர் இதோ!

Kangua
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா – சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது.

சூர்யா 42 படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்றதும் கிராமத்து கதையாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரச காலத்து கதை போன்ற மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் “கங்குவா” டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.