1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (15:00 IST)

கொடைக்கானலில் தொடங்கிய சூர்யாவின் ‘கங்குவா’ ஷூட்டிங்!

சூர்யா 42 படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் “கங்குவா” டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது வரலாற்றுக் கால காட்சிகளைப் படமாக்க, கொடைக்கானலுக்கு அருகே உள்ள அடர் காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.