செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:24 IST)

ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளாரா இயக்குனர் அமீர்?

கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “பருத்தி வீரன் பட தயாரிப்பின் போது அமீர் பொய்க் கணக்கு காட்டி பணத்தை திருடினார்” எனக் கூறினார்.

அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இயக்குனர்  ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஞானவேல் ராஜா சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்மறை விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்து வருகிறார்.

இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த அறிக்கையை ஏற்க முடியாது என இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கூறியுள்ளனர். இந்நிலையில் ஞானவேல் ராஜாவின் பேச்சால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இயக்குனர் அமீர், ஞானவேல் ராஜா மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.