1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (09:16 IST)

இயக்குனர் அமீரின் தாயார் மறைவு…. திரையுலகினர் அஞ்சலி!

இயக்குனர் அமீர் அவர்களின் தாயார் நேற்று இயற்கை எய்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அமீர். அதையடுத்து அவர் இயக்கிய ராம் மற்றும் பருத்திவீரன் ஆகிய திரைப்படங்கள் அவரை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஆக்கின. இப்போது இயக்கம் தவிர நடிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரின் தாயார் பாத்து முத்து அவர்கள் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இயக்குனர் அமீர் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளியில் பாத்துமுத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.