செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (15:57 IST)

பாலாவின் ‘அவன் இவன்’ பட நடிகர் ராமராஜ் மரணம்… ரசிகர்கள் அஞ்சலி!

இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமராஜ்.

மதுரையில் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராமராஜ் அவன் இவன் திரைப்படத்தில் நகைச்சுவை போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து மேலும் சில திரைப்படங்களில் அவர் நடித்தார். ஆனால் அவன் இவன் அளவுக்கு அவரின் கதாபாத்திரங்கள் மற்ற படங்களில் பேசப்படவில்லை.

இதையடுத்து இப்போது அவர் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 72. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.