திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (20:00 IST)

உக்ரைன் போரில் கலந்து கொண்ட பிரேசில் மாடல் அழகி மரணம்!

brazil model
உக்ரைன் போரில் கலந்து கொண்ட பிரேசில் மாடல் அழகி மரணம்!
உக்ரைன் நாட்டில் ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்ட பிரேசில் நாட்டின் மாடல் அழகி தலிதா டோ வாலே என்பவர் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
உக்ரைன்  நாட்டிற்கு எதிராக ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே என்பவர் போரில் ஈடுபட்டார் 
 
39 வயதான அவர் பதுங்கு குழியிலிருந்து ரஷ்ய ஏவுகணை நோக்கி தாக்குதல் நடத்தியபோது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்
 
கடந்த சில வாரங்களாக மாடல் அழகி தலிதா டோ வாலே தனது யூடியூப் சேனலில் தான் போரில் கலந்துகொண்ட வீடியோக்களை பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது