வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (07:49 IST)

த்ரிஷா இப்படி செய்யலாமா? ரசிகர்கள் கொந்தளிப்பு!

கடந்த ஒரு மாதமாக பருத்திவீரன் பட விவகாரம் சம்மந்தமாக சூர்யா தரப்பு மற்றும் இயக்குனர் அமீர் தரப்புக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இதில் அமீர் தரப்புக்கு ஆதரவாக பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த விஷயத்தில் சூர்யா மற்றும் சிவகுமார் தலையிட்டு பிரச்சனையை முடித்துவைக்க வேண்டும் என கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’மௌனம் பேசியதே’ திரைப்படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் அமீர் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் நடிகர் சூர்யா, நடிகைகள் திரிஷா மற்றும் லைலா மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் ரகு ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மௌனம் பேசியதே படத்தின் 21 ஆம் ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து திரிஷா நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் த்ரிஷா, இயக்குனர் அமீர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்த்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.