வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (15:57 IST)

சினிமா நடிகை அல்ல, டாக்டர்... விஜய்யின் 2வது மனைவி இவர்தான்... மேரேஜ் டேட் ஃபிக்ஸ்ட்!

இயக்குனர் ஏ.எல்.விஜய் 2வது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், அவரை திருமணம் செய்யப்போகும் பெண் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 
 
பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய், கீரிடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ’பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ ஆகிய படங்களை இயக்கினார். 
 
தெய்வ திருமகள் படத்தின் போது அந்த படத்தில் நடித்த அமலா பாலுடன் காதல் வயப்பட்டு 2014 ஆம் திருமனம் செய்துக்கொண்டு, கருத்து வேறுபாடி காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் விஜய்யின் 2வது திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியானது. 
தற்போதும் அதேபோல் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 
 
ஐஸ்வர்யா டாக்டர். பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறாராம். அடுத்த மாதம் 11ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.