செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 31 மே 2021 (12:01 IST)

மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் விஜய் - கியூட் புகைப்படம்!

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய், கீரிடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ’பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, லக்ஷ்மி ஆகிய படங்களை இயக்கி பெரும் பிரபலமடைந்தார்.
 
இவர் தெய்வ திருமகள் படத்தின் போது அந்த படத்தில் நடித்த அமலா பாலுடன் காதல் வயப்பட்டு 2014 ஆம் திருமணம் செய்துக்கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் ஏ.எல் விஜய் ஐஸ்வர்யா (MBBS) என்ற பெண்ணை 2வதுதிருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தான் இந்நிலையில் இன்று மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.  முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை பார்க்கும் எல்லோரும் ரசித்து லைக்ஸ் செய்து குழந்தைக்கு வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.