வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 29 மே 2021 (15:28 IST)

தன் ஒரு வயசு குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கேபிரில்லா!

தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் அவர் தன் செல்ல நாய்க்குட்டிக்கு முதல் பிறந்தநாளை கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளார். என் பேபிக்கு 1 வயசு என்றால் நம்ப முடியவில்லை என கூறி கேப்ஷன் கொடுத்துள்ளார்.