1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 29 மே 2021 (15:37 IST)

யூடியூபில் மாபெரும் சாதனை படைத்தது அஷ்வினின் 'லோனர்' பாடல்!

"குக்கு வித் கோமாளி" புகழ் அஷ்வினின் நடிப்பில் உருவாகியிருக்கும் ' லோனர்' இசை ஆல்பம் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
 
"குக்கு வித் கோமாளி " புகழ் அஷ்வினின் நடிப்பில் தனிமையை மையப்படுத்தி  "லோனர்" என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.  
 
இப்பாடலை  இசையமைத்து இயக்கியுள்ளார் எடி கிரிஸ். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் பிரேம் கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார்.  
 
கிஷான்  எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்பாடல் வெளியான  ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் மாபெரும் சாதனை பெற்று வருகிறது.