1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 31 ஜனவரி 2018 (11:23 IST)

ரோஜாவை வைத்து பலான படம் எடுப்பேன்: சர்ச்சையை கிளப்பிய தெலுங்கு இயக்குனர்...

தெலுங்கு இயக்குனர் அஜய் கவுந்தின்யா இசை வெளியீட்டு விழா ஒன்றில் நடிகை மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான ரோஜாவை கடுமையாக விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏர்படுத்தியுள்ளது. 
 
இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆபாச பட நடிகையை வைத்து குறும்படம் ஒன்றை எடுத்து வருகிறார். இந்நிலையில், அஜய் கவுந்தின்யா இயக்கியுள்ள பூத் பங்களா படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. 
 
இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் அஜய் கவுந்தின்யா தெலுங்கு சினிமா துறையில் 2,000-ற்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் உள்ளனர். படம் மூலம் தினமும் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துபவர்கள் உள்ளனர். 
 
ரோஜா ஏன் தெலுங்கு திரையுலகம் பற்றி பேசுவது இல்லை. நாடு முழுவதும் பிற துறைகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை பற்றி பேசும் ரோஜா சினிமா பற்றி மட்டும் வாய் திறப்பது இல்லை. 
 
ராம் கோபால் வர்மா வெளிநாட்டு நடிகையை வைத்து காட், செக்ஸ் அன்ட் ட்ரூத் (God, Sex And Truth) எடுத்தால் நான் ரோஜாவை வைத்து காட், செக்ஸ் அன்ட் ட்ரூத் - 2 படத்தை எடுக்க ரெடி என்று தெரிவித்துள்ளார். இது தெலுங்கு திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.