புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:48 IST)

“வாழ்க்கை நிறைய விஷயங்களை கற்றுத் தந்துள்ளது” – ‘அட்டகத்தி’ தினேஷ்

வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தந்துள்ளது’ என ‘அட்டகத்தி’ தினேஷ் பேசினார்.

 
கார்த்திக் ராஜு இயக்கத்தில், தினேஷ் நடித்துள்ள படம் ‘உள்குத்து’. நந்திதா ஸ்வேதா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ‘அட்டகத்தி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். வருகிற 29ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தினேஷ், “நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை, இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுத் தந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர், தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர், இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். ‘கபாலி’ படத்துக்குப் பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி” என்றார்.