தந்தையுடன் புதிய புகைப்படம்… கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கெட் அப் இதுதானா?

Last Modified வியாழன், 8 அக்டோபர் 2020 (17:04 IST)

நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தையுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு கிளம்ப படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்


விக்ரம் கதாநாயகனாகவும், துருவ் விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருக்கும் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவிருப்பதாகவும், முக்கிய வேடங்களில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது நடிகர் துருவ் விக்ரம் தனது தந்தையுடன் ஒரு கேரவனில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கார்த்திக் சுப்பராஜின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் இதுதான் அந்த படத்தில் இருவரின் கெட் அப் என்றும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :