ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (15:43 IST)

புத்தம் புதுக் காலை பட டிரைலரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான் !

இந்தக் கொரொனா காலத்தில் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் ஒடிடி தளத்தில் நிறைய திரைப்படங்கள் வெளியாகின்றன.

பல முன்னணி நடிகர்களின் படங்கள்கூட தற்போது ஒடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு புதிய வருகையான ஆந்தாலஜி எனப்படும் ஐந்து  குறும்படங்களை ஐந்து முன்னணி இயக்குகிறார்கள்.

இந்த குறும்பட திட்டத்தை அமேசான் prime video அறிவித்துள்ளது.

இதில், சுதா கொங்கரா,கவுதம் மேனன், சுஷாசினி மணிரத்னம்,. கார்த்திக் சுப்புராஜ், ராஜி மேன் உள்ளிட்டோர் இப்படங்களை இயக்குகின்றனர்.

இந்நிலையில் இண்று இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தம் புதுக் காலை என்ற படத்தின் டிரைலரை வெளியிட்டு ஆந்தாலஜி பிலிம்கள் எடுக்கவுள்ள ஐந்து இயக்குநர்கள் மற்றும்  நடிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.