செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (12:27 IST)

தலையா? தளபதியா? பிடித்த நடிகரை மேடையில் கூறிய துருவ் விக்ரம்- வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விக்ரம். அவரது மகன் துருவ் விக்ரம் தெலுங்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.    


 
இந்த படம் முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற டைட்டிலில் உருவாகி வந்தது. ஆனால், ஒரு சில காரணத்தால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர் ஆதித்ய வர்மா  என்ற தலைப்பில் கிரி சய்யா இயக்கி வருகிறார். இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஹேண்ட்ஸம் ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார் துருவ் விக்ரம். 
 
இந்நிலையில் தற்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துருவ்விடம் அங்குள்ள மாணவர்கள் " உங்களுக்கு யாரை பிடிக்கும் தலையா? தளபதியா? என்று கேட்டனர், அதற்கு துருவ் " உண்மையாக சொல்லவேண்டுமென்றால் எனக்கு தளபதியை தான் பிடிக்கும் என கூறினார். உடனே அந்த அரங்கமே விசில் சத்தத்தால் அதிர்ந்தது. தற்போது இந்த வீடியோவை  விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.