செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:13 IST)

சச்சின்தான் என்னுடைய ஆதர்ஸம்… தோனி நெகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

எம்எஸ் தோனிக்கு சொந்தமான ஓசூரில் உள்ள பள்ளியில் கிரிக்கெட் மைதான தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட எம்எஸ் தோனி பேசியபோது நான் பத்தாம் வகுப்பில் கூட பாஸ் செய்ய மாட்டேன் எனது தந்தை முடிவு செய்தார். ஆனால் நான் தேர்ச்சி அடைந்ததால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

அந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் “கிரிக்கெட்டில் உங்கள் ஆதர்ஸம் யார்?” என்று கேட்க அதற்கு தோனி சச்சின்தான் என்று பதிலளித்துள்ளார். மேலும் “எப்போதுமே என்  இதயத்தில் சச்சினை போல விளையாடதான் நான் நினைத்தேன். ஆனால் அது கடினமானதுதான் என்பதால் நான் அந்த முடிவில் இருந்து விலகிக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.