1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 4 மார்ச் 2023 (21:00 IST)

தனுஷின் 'வாத்தி' படம் ரூ.100 கோடி வசூல்! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

vaathi
தனுஷ் –சம்யுக்தா நடிப்பில், வெங்கி இயக்கத்தில், ஜிவி.பிரகாஷ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான படம் வாத்தி. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இன்று வெளியானது.

'திருச்சிற்றம்பலம்' படம் வெற்றிக்குப் பின், தனுஷ் நடிப்பில், தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸ் ஆன திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை ஈட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு,  'வாத்தி' படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், இயக்குனர், தனுஷ், மற்றும் படக்குழுவினர், கலந்துகொண்டனர்.

இந்த  நிலையில், இன்று இப்படத்தின் வசூல் உலகளவில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷின் அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களைத் தொடர்ந்து வாத்தி படமும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.