1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (13:06 IST)

இட ஒதுக்கீடு குறித்து ‘வாத்தி’ இயக்குனரின் கருத்துக்கு கடும் கண்டனம்..!

vaathi director
இட ஒதுக்கீடு குறித்து ‘வாத்தி’ இயக்குனரின் கருத்துக்கு கடும் கண்டனம்..!
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரியின்  இட ஒதுக்கீடு குறித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
 
இயக்குனர் வெங்கி அட்லுரி சமீபத்தில் அளித்த பேட்டியில் நீங்கள் மத்திய அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ’நான் ஒருவேளை மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆனால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவேன் என்றும் இட ஒதுக்கீட்டை ஜாதி அடிப்படையில் வழங்காமல் பொருளாதார அடிப்படையில் வழங்க உத்தரவிடுவேன் என்றும் கூறினார்
 
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவகிறது. ஜாதி அடிப்படையில் ஆன இட ஒதுக்கீடு தற்போது நாடு முழுவதும் அமலில் இருந்து வருகிறது என்பதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தற்போது தான் இட ஒதுக்கீட்டின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக படித்து முன்னேறி வருகின்றனர் என்றும் ஆனால் ‘வாத்தி’ இயக்குனர் இந்த பேச்சு சர்ச்சைக்குரியதாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran