1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (12:38 IST)

விறுவிறுப்பு இல்லாத முன்பதிவுகள்.. ‘வாத்தி’ ‘பகாசூரன்’ படங்கள் தேறுமா?

vaathi bakasuran
விறுவிறுப்பு இல்லாத முன்பதிவுகள்.. ‘வாத்தி’ ‘பகாசூரன்’ படங்கள் தேறுமா?
வரும் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனுஷ் நடித்த ‘வாத்தி’ மற்றும் செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் இந்த இரண்டு படங்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 
 
ஆனால் சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் இதுவரை ஒரு காட்சி கூட முழுமையாக டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகவில்லை என்பது   ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களாக தமிழ் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு, கவினின் டாடா உள்பட பல படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வரும் நிலையில் அந்த வெற்றிப்பட வரிசையில் தனுஷின் வாத்தி மற்றும் செல்வராகனின் ‘பகாசூரன்’ இணைமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva