1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 8 டிசம்பர் 2018 (10:18 IST)

சர்காரை முந்திய 2.0,! 'பாகுபலி 2' சாதனையை முறியடிக்கவில்லை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்தும் வசூலில் மாஸ்காட்டி வருகிறது. கடந்த 29ம்  தேதி வெளியான 2.0, இன்னும் பல திரையரங்குகளில் 2 வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 



சென்னையில்   ரஜினி படங்களில் இதுவரை இல்லாத அளவாக  2.0 திரைப்படம், வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான 9 நாட்களில் 15.57 கோடி ரூபாய் சென்னையில் மட்டும் வசூலாகியுள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று சுமார் ஒரு கோடி ரூபாய் வசூலாகி பாக்ஸ் ஆபிஸ்  வசூலில் சக்கை போடுபோட்டு வருகிறது 2.0.   இதன் மூலம் சர்கார் படத்தின் வசூல் சாதனையை 2,0 முறியடித்துள்ளது. அதேநேரம் பாகுபலி 2 வசூலை இன்னும் முறியடிக்கவிலலை. பாகுபலி 2 திரைப்படம் சென்னையில் 18 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் உள்ளது.  2,0 தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.