திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (14:18 IST)

தி கிரே மேன் பிரீமியர்… அமெரிக்காவில் மகன்களோடு தனுஷ்… வைரல் புகைப்படங்கள்!

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார். அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார் என்று பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. ஆனால் டிரைலரில் தனுஷுக்கான காட்சிகள் அதிகமாக இல்லை. இது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமானதாக அமைந்தது.

இதையடுத்து ஜூலை 22 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போது அமெரிக்காவில் படத்தின் ப்ரிமீயர் படக்குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரோடு கலந்துகொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)