வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (10:38 IST)

தி கிரே மேன் படத்தில் தனுஷின் மிரட்டலான ஸ்டண்ட் காட்சி… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட கிளிம்ப்ஸ்!

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார். அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார் என்று பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. ஆனால் டிரைலரில் தனுஷுக்கான காட்சிகள் அதிகமாக இல்லை. இது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமானதாக அமைந்தது. இதையடுத்து ப்ரமோஷன்களில் தனுஷுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ் மற்றும் கிறிஸ் இவான்ஸ் மோதும் மிரட்டலான ஸ்டண்ட் காட்சியின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.