பொங்கலுக்கு மாமனாருடன் மோதும் தனுஷ் – தர்பார் vs பட்டாஸ்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் தர்பார் படத்தோடு தனுஷின் பட்டாஸ் படம் மோத உள்ளது.
மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தோடு வெளியான பேட்ட படத்தோடு மோதி அஜித்தின் விஸ்வாசம் படம் பெருவெற்றி பெற்றது. அதேப்போல பிகில் படத்தோடு மோதிய கைதி படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் பெரிய ஹீரோ படங்கள் ரிலிஸாகும் நேரத்தில் சிறிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படத்தோடு தனுஷுன் பட்டாஸ் படத்தை வெளியிட சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். சிநேகா,மெஹ்ரீன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனால் அடுத்த ஆண்டு பொங்கல் தனுஷ் குடும்பத்தாருக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுக்கவுள்ளது. அசுரன் படத்திற்குப் பிறகு தனுஷ் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் மார்க்கெட்டும் பெரிதாகியுள்ளது.