1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (11:23 IST)

தனுஷின் வட சென்னை அக்டோபரில் ரிலீஸ்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வரும் அக்டோபர்  மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ், தயாரித்துள்ள படம் வட சென்னை. வெற்றி மாறன் பல ஆண்டுகளாக செதுக்கி வைத்திருந்த இக்கதை, கடந்த சில ஆண்டுகளாக படமாக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி,  அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
இந்தப் படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வரும் தனுஷ் உலகச் சாம்பியன் ஆக நினைக்கும் நேசனல் லெவல் கேரம் ப்ளேயராம். மிகப்பெரிய அரசியலும்  இப்படத்தில் இருக்கிறது.  வட சென்னை மக்களின் நிலம் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை. லைகாக புரொடக்சன் இப்படத்தை வரும் அக்டோபரில் வெளியிடுகிறது.