'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Last Modified புதன், 5 செப்டம்பர் 2018 (08:50 IST)
பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒருவழியாக தற்போது ரிலீஸ் தேதியை மறைமுகமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதை படப்பிடிப்பு நிறைவு நாளில் 'ஹேப்பி தீபாவளி' என்ற கேக்கை வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.

வரும் தீபாவளி திருநாளில் விஜய்யின் சர்கார்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படமும் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் விஜய் நடித்த 'காவலன்' மற்றும் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் சசிகுமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். தர்புகா இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் தனுஷ் ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த படம் ஆகும்


இதில் மேலும் படிக்கவும் :