திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (16:40 IST)

சர்வதேச விருது வென்ற தனுஷ் திரைப்படம்

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படம் சர்வதேச அளவில் விருது வென்றுள்ளது.

 
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை கடந்து பாலிவுட் சினிமாவிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். தி எக்ஸ்ட்ராடினரி அர்னி ஆப் ஃபகிர் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
 
இந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
 
இந்நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கிய கென் ஸ்காட் தனது டுவிட்டர் பக்கத்தில் படம் சர்வதேச விருது பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, ரே ஆஃப் சன்ஷைன் என்ற விருதை வென்றுள்ளது.