புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (23:21 IST)

'சக்க போடு போடு ராஜா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் உருவாகி வந்த சக்கபோடு போடு ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இன்று ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.





அதாவது இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' திரைப்படமும், தினேஷ் நடிக்கும் உள்குத்து' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நீண்ட விடுமுறை வாரம் என்பதால் அனைத்து படங்களும் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்தில் சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சேதுராமன் இயக்கி வருகிறார். விடிவி புரடொக்சன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.