செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (17:44 IST)

முரளிதரன் பயோபிக் – விஜய் சேதுபதிக்கு முன்னர் இவர்தான் ஹீரோவாம்!

முரளிதரனின் பயோபிக் படத்தில் நடிக்க முதலில் நடிகர் தனுஷிடம்தான் அணுகப்பட்டதாம்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ”800” திரைப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. ஈழப்படுகொலையின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகள், திரைத்துறை, பொதுமக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து வெளியேற வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முன்னரே நடிக்க வைக்க தனுஷிடம் அணுகியுள்ளனர். ஆனால் இந்த படத்தால் சர்ச்சைகள் வரும் என்பதை புரிந்துகொண்ட தனுஷ் அதில் நடிக்க முடியாது என விலகிவிட்டாராம்.