திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (09:33 IST)

கலக்கும் ஆல்யா மானசா மகளின் கியூட் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.
 
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு 'ஐலா சையத்' என பெயரிட்டிருக்கும் ஆல்யா அடிக்கடி செல்ல மகளின் அழகிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஐலா செம பேமஸ் ஆகிவிட்டார். அந்தவகையில் தற்போது ஜாலியாக விளையாடும் அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ஐலா கிடுகிடுன்னு வளர்ந்துவிட்டதாக எல்லோரும் கமெண்ட் செய்து கூறி வருகின்றனர்.